சாதி மறுப்பின் அடையாளமாகவும், கடவுள் மறுப்பின் குறியீடாகவும் அறியப்பட்ட பெரியார்! அவரின் இன்னொரு அடையாளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா? திரைப்படம். கடந்த மாதம் 18-09-2014 அன்று மாலை மக்ரிபுக்குப் பிறகு இத்திரைப்படத்தின் வெளியீட்டு விழா சென்னை வடபழனி RKV ஸ்டுடியோவில் நடைபெற்றது! பெரியார் எந்த அளவுக்கு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஆழமாக வாசித்திருக்கிறார் என்பது அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. அதில் முஹம்மது ஸல் … அவர்கள் குறித்தும், இஸ்லாமியர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்படுவது குறித்தும், இஸ்லாமியர்களிடம் இருக்கும் மூடப் பழக்கங்கள் மற்றும் கிலாஃபத் குறித்தும் பெரியார் பேசியிருக்கிறார். இந்நிகழ்ச்சியில், திரையுல இயக்குனர்கள், பத்திரிகை நண்பர்கள், மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தஃவா குழுக்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்! இதை தமிழ் சமூகத்திடம் கொண்டு சேர்க்க வேண்டியது முஸ்லிம்களின் பொறுப்பு.