மக்கள் தங்களது வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் நிலத்தடி நீர், காற்று, கடல் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் ஏறக்குறைய மாசடைந்து விட்டன. விவசாயம் இரசாயன மயமாகி, உணவுப் பொருட்கள் பூச்சி மருந்துகளுடன் இரண்டறக் கலந்து நஞ்சாகி – நாசத்தை உள்ளடக்கிக் கொண்டு விற்பனைக்கு வருகின்றன. வேறுவழியில்லாமல் அவற்றை உண்ணும் மக்கள் புதுப் புது விதமான உயிர்க் கொல்லி நோய்களில் சிக்கிச் சீரழிந்து வருகின்றனர்.இது தொடர்பாக பல எச்சரிக்கைக் கட்டுரைகளை நமது சமூக நீதி முரசு இதழில் தொடர்ந்து வெளியிட்டு வருவதை வாசகர்களாகிய நீங்கள் நன்றாக அறிவீர்கள்.இந்த எச்சரிக்கைகள் முஸ்லிம் சமூகத்தில் எத்தனைப் பேரின் கவனத்திற்குச் சென்றுள்ளது? எவ்வளவு பேர் இதை கவனத்தோடு எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியாது. ஆனால் இந்த எச்சரிக்கை எவ்வளவு உண்மைகளை உள்ளடக்கியது என்பதை அன்றாடம் ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் நிதர்சணமாக உணர்த்துகின்றன.சமீபத்தில் மத்திய அரசின் சுகாதாரத் துறையும் (கீஷீக்ஷீறீபீ பிமீணீறீtலீ ளிக்ஷீரீணீஸீணீவீsணீtவீஷீஸீ (கீபிளி) என்ற) உலக சுகாதார அமைப்பும் சேர்ந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, இந்திய மக்களின் உடல் நலம் மிக மோசமான வகையில் சீர்குலைந்து வருவதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதுடன் விவசாயம், உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல், சுகாதாரம் போன்ற மனித வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத துறைகளில் அந்நிய சக்திகள் மற்றும் தனியார் துறைகளின் ஆதிக்கம் எந்த அளவிற்குப் பரவியுள்ளது என்பதையும், இந்திய அரசுத் துறைகளிலும் கொள்கை முடிவுகளிலும் அந்த சக்திகள் எந்தளவுக்கு ஊடுருவியுள்ளன என்பதையும் அதிர்ச்சியளிக்கும் வகையில் விளக்குகிறது.அந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த, சுகாதாரத்திற்கான பிரதமரின் ஆலோசகரான மருத்துவர் சிவக்குமார் என்பவர் கூறுகிறார்:-இந்தியாவில் ஆண்டுதோறும் 4 கோடிப் பேர் நோயின் காரணமாக வறுமையின் கோரத்திற்குத் தள்ளப்படுகின்றனர். பணம் இல்லாததால் 30 சதவிகித மக்கள் மருத்துவமே பார்ப்பதில்லை. இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. 47 சதவிகித மக்கள் மருத்துவத்திற்காக தங்களின் பூர்வீகச் சொத்துக்களை விற்று மருத்துவச் செலவு செய்து கொண்டிருக்கின்றனர். 48 சதவிகித மக்கள் மருத்துவத்திற்காக கடனாளியாகின்றனர். “சுகாதாரத் துறையின் கொள்கை முடிவுகளும் திட்டங்களும் சாதாரண மனிதனின் கழுத்தை இறுக்குபவனாக இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.1960 களில் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தால் ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். அந்தப் பஞ்சத்திலிருந்து மீள வேண்டுமானால் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று அமெரிக்க விஞ்ஞானியான ‘நார்மன் போர்லாகின்’ என்பவர் மூலம் அமெரிக்கா ‘தூண்டில்’ போட்டது. அந்தத் தூண்டிலில் மாட்டிக் கொண்ட இந்தியாவில் ‘பசுமைப் புரட்சி’ கொண்டு வரப்பட்டது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் உயிரோட்டம் நிறைந்த இந்திய மண்ணில் இரசாயனத்தையும் பூச்சி மருந்துகளையும் கொட்டி, மண்ணை மலடாக்கி, உணவை நஞ்சாக்கி, அதை உண்ணும் மக்களை அந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்ட 40 – 50 ஆண்டுகளுக்குள்ளாகவே பெரும்பெரும் நோய்களின் பிடியில் தள்ளி…. இப்போது மருத்துவமனையே கதி என்ற நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறார்கள்.