தமிழக முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய சில அழகிய முன்னெடுப்புகள்.

A young girl watches Muslims having their morning prayer at the Quirino Grandstand to celebrate Eid al-Fitr, marking the end of Ramadan. Photo by Mark Cristino/Rappler

உலகம் முழுவதும் இஸ்லாமிய வெறுப்புகள் மிக கூர்மையாக திட்டமிடப்பட்டு அதிக நிதியும் அறிவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொலைநோக்கு இலக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

95 % சதவீத உலக ஊடகங்களை தங்கள் வசம் வைத்துள்ள சியோனிஸ யூதர்கள் சித்தாந்த ரீதியான பகையால் முஸ்லிம்களுக்கு எதிராக அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் வெறுப்புகளை தங்கு தடையின்றி பரப்பி வருகின்றனர்.

பூமியில் வாழும் 750 கோடி மக்களும் யூதர்களின் இந்த ஊடக கிடுக்கிபிடியிலிருந்து தப்பிக்க இயலாத வகையில் வலைக்கப்பட்டுள்ளனர்.

காலம் முழுவதும் உலகின் எல்லா பாகத்திலிருந்தும் விரட்டியடிக்கப்பட்ட யூதர்களுக்கு கண்ணியாமான வாழ்வளித்து ஜெருசலேத்தில் சீரழிந்து கிடந்த அவர்களின் கிப்லாவை புனரமைத்து வழிபாட்டு உரிமையை தந்த உதுமானிய கிலாஃபத்துக்கும் முஸ்லிம் உம்மத்துக்கும் யூதர்கள் செய்யும் அழகிய நன்றிக்கடன் இது.

யூத சியோனிஸவாதிகளின் இந்த நயவஞ்சக வெறுப்பு பிரச்சாரத்தை உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

முஸ்லிம்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ஐரோப்பிய நாடுகளிலும் தென்கிழக்கு இந்தியப் பொருங்கடலில் அமைந்துள்ள நியூஸிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் செயல்பட்டு வரும் வலதுசாரி அமைப்புகள்….

அதேபோல முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இந்தியா இலங்கை மியான்மர் போன்ற நாடுகளில் செயல்படும் இந்துத்துவா மற்றும் பவுத்த இனவாத அமைப்புகள்…. இவர்கள் தங்களின் சமூக அரசியல் பொருளாதார இலக்கை அடைந்து கொள்வதற்கு இந்த உலகளாவிய முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்தி ஆதாயம் அடைகின்றனர்.

இதனால் இந்தியாவில் குக்கிராமத்தில் வாழும் முஸ்லிம் அல்லாத பிறசமூகத்து மக்கள் தங்களோடு பல நூற்றாண்டுகள் ஒன்றாக கலந்து வாழும், தங்கள் இனத்திலிருந்து இஸ்லாத்தை தழுவியுள்ள, தங்களின் சுக துக்கங்களில் இரண்டற கலந்து வாழும் முஸ்லிம்கள் மீது ஒரு இனம் புரியாத அச்சம் கலந்த வெறுப்பை வளர்த்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

பல ஆண்டுகளாக திட்டமிட்டு ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் உளவியல் ரீதியான தாக்குதல் தான் இதற்கு காரணம்.

குடியரசு இந்தியாவில் சங்பரிவார் அமைப்புகளால் நிறுவனமயமாக்கப்பட்டு வடஇந்தியா முழுவதும் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த வெறுப்பு பிரச்சாரம் அவர்களை இந்தியாவின் ஆட்சி கட்டிலில் அமர்த்தியுள்ளது. இனி வடஇந்திய சமூகத்தின் சிந்தனையை முஸ்லிம் வெறுப்பிலிருந்து மீட்டெடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வெறுப்பின் மூலம் ஆட்சி அதிகாரத்தை ருசித்தவர்கள் மக்களிடம் இணக்கம் ஏற்பட முஸ்லிம்கள் குறித்த நல்லெண்ணம் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

திராவிடத்தால் ஓரளவிற்கு பாதுகாக்கப்பட்ட தென்னகத்திலும் இந்த வெறுப்பு பிரச்சாரங்கள் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் மூலமாக இன்னும் கல்வி நிறுவனங்கள் மூலமாக கிராமங்கள் தோறும் மிக வலிமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற. இந்த ஆபத்தை மிகச்சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

களத்தில் இறங்காத சில வலைத்தள பதிவாளர்களுக்கு மட்டும் தான் இது மிகைப்படுத்தப்பட்ட கருத்தாக தெரியும்.

தமிழகத்தில் வெறுப்புகள் தீப்பொறியாக பரவாமல் இருப்பதற்கு முஸ்லிம்கள் இஸ்லாம் வலியுறுத்தும் பல அழகிய சமூக முன்னெடுப்புகளை தங்கள் மண்ணுக் கேற்றவாறு மேற்கொள்ள வேண்டும். சிறியதொரு நற்செயலாக இருந்தாலும் அதை தொடர்ச்சியாக செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நாம் நினைவில் கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ்……. அதை இந்த ஈகைத் திருநாளிலிருந்து துவங்குவோம்.