சென்னை புதுக் கல்லூரியில் இஸ்லாமிய இளைஞர்கள் மாநாடு – 2019 14.3.2019 அன்று நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் “முஸ்லிம்களின் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். முஸ்லிம் பிள்ளைகளுக்கு 5 வயது துவங்கி  முதல் 10 ஆண்டுகளுக்கு மார்க்க கல்வி பிறகு  இந்த பூமியில் உள்ள அனைத்து பயனுள்ள கல்வியும் கற்பிக்கப்பட வேண்டும். உங்களது வாழ்க்கைக்கான இலக்கை வழிகாட்டுதலை முதலாளித்துவ கல்வியிலிருந்து தேடாதீர்கள். 1438 ஆண்டுகால இஸ்லாமிய மரபிலிருந்து தேடுங்கள்.  அது உங்களுக்கு தெள்ளத் தெளிவான பாதையை காட்டும். அதுவே வெற்றிப்பாதை” என்ற செய்தியை மாணவர்களிடம் எடுத்துச் சொன்னார்.