லெப்பைக்குடிக்காடு அருகே உள்ள வாலிகண்டபுரத்தில் அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி சிறப்பாக இயங்கி வருகிறது. இக் கல்லூரியில் இரண்டாம் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு இஸ்லாமிய கல்வித்திட்டம் அதன் சிறப்புகள்  இஸ்லாமிய வரலாற்றில் வாழ்ந்த பெண் கல்வியாளர்கள் சாதனையாளர்கள் குறித்த சிறப்பு வகுப்பு 22.3.2019 அன்று நடைபெற்றது.

சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் “கல்வி பயிலும் காலத்தில் இந்த மார்க்கத்திற்காக நமது முன்னோர்கள் செய்த தியாகங்களை அடைந்த துன்பங்களையும் அதன் பயனாக முஸ்லிம் சமூகம் பெற்ற நன்மைகளையும் எடுத்துக் கூறினார். முறையாக பயிற்றுவித்தால் மூமினான எந்த ஆண் பெண் பிள்ளையும் வழிதவறி செல்லாது என்ற செய்தியையும் குறிப்பிட்டார்.