”வறுமையை ஒழிப்பது, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய இரண்டும்தான் மிகப்பெரிய பிரச்சினையாக இந்தத் தேர்தலில் உள்ளது. ஆனால், பிரதமர் மோடி தனது அரசின் தோல்வியை மறைப்பதற்காகவும் மக்களைத் திசை திருப்புவதற்காகவும் பழைய விஷயங்களைக் கொண்டு வருகிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசாங்கத்தின் நிதியை கல்வி, மருத்துவமனையின் தேவைக்காக பயன்படுத்த வேண்டும். ஆனால், பாஜக அரசு மக்கள் நலத் திட்டங்களைவிட விளம்பரத்திற்காக நிதியைப் பயன்படுத்துகிறது.”