பிரியங்கா காந்தி, பொதுச்செயலாளர், காங்கிரஸ் கட்சி

அதிகாரம் தலைக்கு ஏறும்போது, இரு தவறான நோக்கங்கள் எழுகின்றன. ஒன்று மக்களை எளிதாக தவறான பாதைக்குத் திருப்பி விடலாம். இரண்டாவது தனக்கு எதிராக பேசுபவர்களை அச்சுறுத்துவது. நாங்கள் அச்சப்படப் போவதில்லை. அவர்கள் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எங்களை துன்பப்படுத்தினால், எங்கள் போராட்டம் வீரியமாகும். மக்கள் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதை பிரதமர் மோடி முதலில் நிறுத்திக்கொள்ளட்டும். தேசத்தில் நடக்கும் அனைத்தையும் மக்கள் புரிந்துகொள்கிறார்கள், பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.