
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் மூன்றாண்டு இளநிலை பட்டப் படிப்புடன் இணைந்துள்ள இஸ்லாமிய படிப்புக்கான “ஆலிமா அல் முபஷ்ஷிரா” பட்டமளிப்பு மற்றும் தாருஸ்ஸலாம் ஸ்கூல் ஆப் இஸ்லாமிக் ஸ்டடிஸ் பள்ளியில் 7 & 5 ஆண்டுகள் ஆலிமா படிப்புக்கான ” ஆலிமா அல் ஸலாமியா” பட்டமளிப்பு விழா 12-4-2025 மாலை நடைபெற்றது.

தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமாவின் தகுதிமிக்கத் தலைவர், ஆன்மிக ஆசான் மௌலானா மௌலவி P.A.காஜா மொயினுத்தீன் பாக்கவி…, அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் இஸ்லாமியப் பாடதிட்டக் குழு ஆலோசகர் மௌலவி யூஸுஃப் ஸித்தீக் மிஸ்பாஹி…,
தமிழ்நாடு முஸ்லிம் எஜூகேஷனல் டிரஸ்டின் அறங்காவலர் மௌலவி இத்ரீஸ் பாஜில் பாக்கவி மற்றும் இஸ்லாமியத் துறையின் ஆண் பெண் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஆலிமா / முபல்லிகா பட்டம் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறுதியாக அன்னை கதீஜா அகாடமியின் தாளாளர் ஆலிமா நஜ்மா M.A.,M.Sc., உறுதிமொழி வாசிக்க மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இன்ஷா அல்லாஹ்… எதிர்காலத்தில் மகத்தான கல்வியாளர்களாக உருவாகும் இலக்குடன் பட்டம் பெற்றுள்ள இந்த மூஃமினான மாணவிகளுக்காகவும் அவர்களை அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ள அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் ஸ்கூல் ஆப் இஸ்லாமிக் ஸ்டடீஸ் நிறுவனங்களுக்காகவும் அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத்திடம் மனமுவந்து துஆ செய்யுங்கள்.
