மீலாது விழா மற்றும் சிந்தனையாளர் பழ.கருப்பையா எழுதிய “அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்” என்ற நூல் வெளியீட்டு விழா

ஈரோடு மாவட்ட முஸ்லிம் அசோசியேசன் சார்பில் மீலாது விழா மற்றும் சிந்தனையாளர் பழ.கருப்பையா அவர்கள் எழுதிய “அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்” என்ற நூல் வெளியீட்டு விழாவும் 20.12.2024 அன்று சிறப்பாக நடைபெ‌ற்றது.

சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டோம்.

ஈரோட்டின் உலமாக்கள் சமுதாயப் புரவலர்கள் சமுதாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பழ.கருப்பையா அவர்களின் முயற்சியை கண்ணியப்படுத்தினர்.

பெருமானார் (ஸல்) அவர்கள் குறித்தும் இஸ்லாமிய நாகரிகம் குறித்தும் முஸ்லிம் அல்லாத அறிஞர்களின் ஆக்கங்கள் பேச்சுக்கள் வெளிவந்து கொண்டே இருக்க வேண்டும். அதை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்தும் எழுதப்படும் ஆய்வு நூல்களின் வழியாகத் தான் பிற சமுதாய அறிஞர்களிடம் அரசியல் தலைவர்களிடம் அரசு அதிகாரிகளிடம் ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்த முடியும்.

இலக்கிய விழாக்கள் குறைந்தால் எதிர்ப்பும் வெறுப்பும் மக்களிடம் அதிகரிக்கும். வாசிப்பு குறைந்து போனால் மக்களிடம் அடிமைத்தனம் அதிகரிக்கும்.