அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின்3ஆவது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் 3ஆவது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 12-4-2025 அன்று இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.

காலை அமர்வில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இறுதித்தேர்வு தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்கள் உள்ளிட்ட இளநிலை முதுநிலை மாணவிகள் 470 பேர் பட்டம் பெற்றனர்.

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக தமிழக முஸ்லிம் உம்மத்தின் முன்னத்தி ஏர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M.காதர் மொய்தீன் Ex MP அவர்களும், திராவிட இயக்க கொள்கைப் பயிற்சியாளர், திமுக மாணவர் அணி செயலாளர், வழக்கறிஞர் இரா.ராஜிவ் காந்தி M.A.,M.L அவர்களும் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முன்னேறி வருகிறது.