தமிழக முஸ்லிம்களிடையே முதன்முறையாக இஸ்லாமிய நிதியியல் மற்றும் ஹலால் பங்குச்சந்தை முதலீடுகள் குறித்த ஒருநாள் வகுப்பு 29.12.2024 அன்று பண்டிச்சேரி மாநிலம் கடுவனூரில் அமைந்துள்ள பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது.
இந்திய பங்குச் சந்தையில் ஷரீஅத் வகைக்கு உட்பட்ட பங்குகளை எதன் அடிப்படையில் தரம் பிரிப்பது, அதற்கு அறிஞர்களின் வழிகாட்டுதல் என்ன என்பது குறித்து மெளலவி உமர் ஹஸனி அவர்கள் வகுப்பெடுத்தார்கள்.

முதலீடுகள், நிதி மேலாண்மை, அதற்கான திட்டமிடல் குறித்து நிதித்துறை வல்லுனர் சகோதரர் இம்தியாஸ் அவர்கள் வகுப்பெடுத்தார்கள்.
சவூதி அரேபிய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழிமுறைகள் குறித்து சவூதி அல் கோபரிலிருந்து சகோதரர் சீனி முஹம்மது அவர்கள் எளிய முறையில் வகுப்பெடுத்தார்கள்.
சர்வதேச அளவில் இஸ்லாமிய வங்கியியல் & நிதி (Islamic Banking and Finance) மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி எங்கெல்லாம் படிக்கலாம் என்பது குறித்த விரிவான தகவல்களை பேராசிரியர் இஸ்மாயில் அவர்கள் விளக்கினார்கள்.
முஸ்லிம்கள் செல்வம் பெருக்க வேண்டியதின் கட்டாயம் குறித்தும், கல்விநிதியுதவி அளித்து இஸ்லாமிய நிதியியல் வல்லுனர்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் குறித்தும், உற்பத்தித் தொழில் (Manufacturing Business) சாம்ராஜ்யங்களை உருவாக்கும் இலக்கு குறித்து சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் வகுப்பெடுத்தார்.



தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான படித்த விவரம் அறிந்த சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
முஸ்லிம்களை ஆற்றல்படுத்தி அதிகாரப்படுத்தும் இதுபோன்ற பயனுள்ள பயிலரங்குகளைத் தான் இன்றைய அறிஞர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளிடமிருந்து முஸ்லிம்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்தியது.
ஆராய்ச்சிக் கல்வியும் உற்பத்தி பொருளாதாரமும் இன்றைய காலத்தின் பேராற்றல்மிக்க ஆயுதங்கள் என்பதை நினைவில் கொள்வோம்.