
“நாட்டுக்காக போராடாதவர்களுக்கு சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பின் முக்கியத்துவம் எப்படி தெரியும்? ஆனால், நாங்கள் பொய் சொல்வதாக பிரதமர் கூறுகிறார். ஆனால் நம்பர் ஒன் பொய்யர் பிரதமர்தான். ரூ.15 லட்சம் வரும் என்று சொன்னார். ஆனால், ஒன்றும் வரவில்லை. இவர்கள் நாட்டை தவறாக வழிநடத்துகிறார்கள். பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை வலுப்படுத்த கடந்த 11 வருடங்களில் என்ன செய்தார்கள் என்பதை பிரதமர் கூறியிருக்க வேண்டும்.