இந்த ஆண்டு 8.30 கோடி பிரியாணி பாக்கெட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக Swiggy நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு நிமிடத்திற்கு 158 பாக்கெட் பிரியாணி ஆர்டர் வருவதாக இந்த நிறுவனம் கூறுகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாக இயங்கும் பெங்களூரு ஹைதராபாத் சென்னை கோவை போன்ற நகரங்களில் தங்கி பணியாற்றும் படித்த இளைஞர்கள் இளம் பெண்களிடமிருந்து தான் பிரியாணி ஆர்டர்கள் குவிகின்றன.
பெங்களூரு நகரத்தில் மட்டும் 24 ஆயிரம் பதிவுசெய்யப்பட்ட பிரியாணி உணவகங்கள் இயங்குகின்றன.பதிவு செய்யப்படாமால் பல மடங்கு அதிகமாக விற்பனையாகின்றன.
முஸ்லிம்கள் பிரியாணி வணிகத்தில் சற்று அதிகமாக இருந்தாலும் இந்த படித்த இளைஞர்கள் இளம் பெண்களை ஈர்க்கும் வகையில் உயர்தரமான பிரியாணி (Branded Biryani) தொழில் செய்வோர் மிக சொற்பமானவர்களே.
சாலை ஓரங்களில் அண்டாவை தட்டி ரூ 200 க்கு விற்பனை செய்யும் பிரியாணி கடைகள் தான் எண்ணிக்கையில் அதிகம். அந்த வருமானத்திலேயே திருப்பதி அடைந்து கொள்வது ஆபத்தானது. இவர்களால் சாதாரண இழப்புகளை கூட தாங்கி நிற்க இயலாது. திறமை ஒரு அமானிதம். அது தெருவோடு முடங்கிப் போய்விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நவீன இந்திய உருவாக்கும் இந்த பணப்புழக்கம் அதிகமுடைய இளைஞர்களை இளம் பெண்களை கவரும் புதிய வகை பிரியாணிகளுக்கும் அதன் வடிவமைப்புகளுக்கும் இந்திய சர்வதேச சந்தைகள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.
ஒரு பார்சல் பிரியாணியை வீட்டுக்கு வரவழைக்க சுமார் 450 ரூபாய் வரை சர்வ சாதாரணமாக செலவு செய்கின்றனர். இவர்களுக்கு பணம் முக்கியமல்ல. தூய்மையும் பொருளின் தரமும் கண்ணுக்கு அழகான பார்சலும் தான் முக்கியம்.
சென்னையில் கோவையில் இயங்கும் பிரியாணி கடைகள் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களது நிறுவனத்தை சர்வதேச தரமுடையதாக மாற்றும் இலக்குடன் முன்னேற வேண்டும்.
உடல்நலனுக்கேற்ற புதிய வகை பிரியாணியை ஆராய்ச்சி செய்து அதற்கு காப்புரிமை வாங்குவதும் அதை சந்தைப் படுத்துவதும் அதன் துணை தொழில்களை கண்டறிவதும் என இவை அனைத்தும் அறிவுசார் பொருளாதாரம் (Knowledge Economy) என்ற வகைக்கு உட்பட்டது. காலம் கடந்து நிற்க கூடியது.
தள்ளுவண்டியில் துவங்கினாலும் சர்வதேச சந்தையை இலக்காக கொண்டு இயங்கும் குணம் என்பது ஒரு தொழில் ஒழுக்கம்.