பெயிண்ட் வியாபாரம், கட்டுமானம் மற்றும் அது தொடர்பான தொழில்கள் செய்யும் சகோதரர்களுக்காக…
அடுத்த 5 – 10 ஆண்டுகளில் சூரியஒளி மின்சாரம் வழங்கும் பெயிண்ட் (Solar Paint) சந்தையில் அறிமுகமாகவிருக்கிறது.
வீடுகளில் வாகனங்களில் சாலைகளில் இந்த சூரியஒளி பெயிண்ட் அடித்தால் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ள முடியும். இன்னும் சில காலங்களில் மின்சாரக் கட்டணத்தின் தொல்லைகள் இல்லாமல் போகும்.
இங்கிலாந்தில் உள்ள University of Sheffield இல் இறுதிக்கட்ட ஆராய்ச்சியில் உள்ளது. ஆனால் அதற்குள் Mercedes-Benz கம்பெனி தனது சோலார் பெயிண்ட் மின்சார வாகனம் விரைவில் வருகிறது என்று அறிவித்துவிட்டது.
முஸ்லிம்களில் பெயிண்ட் வியாபாரம் செய்யும் சகோதரர்கள் உங்கள் பிள்ளைகளை Material Science, Chemical Engineering, Energy Engineering, Biochemistry உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்து மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கல்வியை வெளிநாடுகளில் (இயன்ற வரை) முன்னெடுக்கும் இலக்கை நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும்.
தங்களுக்கு அந்த வயதுடைய பிள்ளைகள் இல்லாத வியாபாரிகள் கல்வித்திறன் மிக்க முஸ்லிம் பிள்ளைகளை இப்படி உருவாக்குவதற்கு பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும்.
பொருள் வாங்கி விற்கும் வியாபார முறையில் லாபம் மங்கி வருகிறது. அறிவுசார் பொருளாதாரத்தை (Knowledge Economy) நோக்கி உங்கள் பிள்ளைகளையும் உம்மத்தின் பிள்ளைகளையும் ஆர்வமூட்டினால் எதிர்காலத்தில் ஆற்றல்மிக்க விஞ்ஞானிகளையும் உற்பத்தித் தொழில் (Manufacturing Business) செய்யும் தொழிலதிபர்களையும் உருவாக்க முடியும்.
இவர்கள் ஈட்டுகின்ற பொருளாதாரம் முஸ்லிம்களின் மேன்மைக்கும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் நிச்சயம் உபயோகமாக இருக்கும். அந்த எண்ணத்தில் தான் இந்த கட்டுரையும் எழுதப்பட்டுள்ளது.
– CMN SALEEM