அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளின் சாதனை Share Facebook Twitter Pinterest WhatsApp பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்றுள்ள சுமார் 146 கலை அறிவியல் கல்லூரிகளில் புதுக்கோட்டை மாவட்ட கடலோரத்தில் அமைந்துள்ள அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் ஆலிமா மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்று சாதனை புரிந்து வருகின்றனர். இவர்களில் முஸ்லிம் மாணவிகள் மூன்றாண்டு பட்டப்படிப்புடன் ஆலிமா படிப்பையும் சேர்த்து படித்து இந்த சாதனையை நிகழ்த்துகின்றனர். இந்த மாணவிகளுக்கான பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மார்க்கத்தையும் உலகத்தையும் ஒருசேர கற்ற ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் உயர்ந்த இலக்குடன் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி தொடர்ந்து சாதித்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.