பைத்துல் ஹிக்மாவில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

தமிழகம் முழுவதும் இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட்ட இஸ்லாமியப் பள்ளிகூடங்கள், கல்லூரிகள், மதரஸாக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 17 – 3 – 2019 அன்று பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற்றது.

தமிழகம் மற்றும் வளைகுடா நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தப் பணிகளில் தன்னார்வத்தோடு தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள சகோதர சகோதரிகள் 350 க்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர்.

முஸ்லிம் உம்மத்தில்…..

》கல்வி வளர்ச்சிப் பணி

》தொழில் வளர்ச்சிப் பணி

முஸ்லிம் சமூக முன்னேற்றத்திற்கு ஆதாரமாக விளங்கும் இந்த இரண்டு துறைகளிலும் நாம் ஆற்ற வேண்டிய சேவைகள் குறித்து வரலாற்று ஆதாரங்களுடன் சமகால சிக்கல்களை முன்னிறுத்தி விளக்கம் அளிக்கப்பட்டது. ஆளுமைமிக்கவர்களாக உருவாக்கும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு அனைவரும் அனைத்து வகையிலும் உதவிட வேண்டுகிறோம். அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டுகிறோம்.