விவசாயம்

விவசாயத்தில் அதிக ஈடுபாடு காட்டாத மக்களாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றோம். முதலில் விளை நிலங்களை வீட்டுமனை என்ற நோக்கமில்லாமல் விளைச்சலுக்காகவே அதிகம் வாங்கிக் குவிக்கும் சமூகமாக முஸ்லிம்கள் மாற வேண்டும். அல்குர்ஆன் மற்றும் பெருமானாரின் வழிகாட்டுதல்களை விவசாயத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். இலாப நோக்கம் பாராமல் இஸ்லாம் அங்கீகரித்த “இயற்கை” வழியிலான விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களைப் புகுத்தி விளைச்சலைப் பெருக்க வேண்டும். மனித இனத்திற்கு தீங்கு இழைக்கின்ற எந்தப் பொருளையும் விளைவிக்கக்கூடாது.

மேற்கத்திய நாசகார விவசாயக் கொள்கைகள் குறித்து மக்களிடமும் விவசாயிகளிடமும் எச்சரிக்கை செய்யவும், இஸ்லாம் அங்கீகரிக்கும் “இயற்கை விவசாயம்” குறித்து கிராமங்கள் தோறும் வழிகாட்டவும் பள்ளிவாசல் உலமாக்களை தயார் செய்ய வேண்டும். அதற்கேற்ப மதரஸா பாடத் திட்டத்தில் ஒரு பாடமாக விவசாயத்தைச் சேர்த்து உலமாக்களுக்கு கற்றுத்தர வேண்டும். இந்தியாவிலும் இஸ்லாமிய உலகிலும் வரலாறு முழுக்க மதரஸா பாடத்தில் விவசாயம் கற்றுத் தரப்பட்டுள்ளதை மூத்த உலமாக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.